Wednesday, 18 February 2015

கதை எழுதப்போறன்..
இப்போதைக்கு trailer மட்டும்..

ராஜா, ரமேஷ், ரஜினி (இத்தாங்க டைட்டில்)


ஸ்கூல் ல இவனுங்கள தெரியாதவங்க யாரும் கிடையாது..

கிளாஸ்ல இருக்கானுங்களோ இல்லையோ, ஆனா ஸ்கூல்ல எப்பவும் இருப்பானுங்க..

ரமேஷ உசுப்பேத்தி, அவன் லவ் பண்ற பொண்ணுகிட்ட "போய் சொல்லுட போய் சொல்லுடா" ன்னு டார்ச்சர் பண்ணி, சொல்லவச்சு, லவ்வ புட்டுக்க வச்சானுங்க ராஜாவும் ரஜினியும்..

அந்த பொண்ணு அதுக்கு முன்னாடி வரைக்கும் ரமேஷ பாத்தா அட்லீஸ்ட் சிரிச்சுட்டாவது போகும், இப்ப அதுவும் போச்சா.. சோளமுத்தா..

அது சரி, இவன் என்ன பண்ணினான் தெரியுமா, அந்த பொண்ணு அன்னைக்கு பரிட்சைக்கு போயிகிட்டு இருக்கு, ஆனா அவன் வெட்டியாத்தான் இருக்கான்றதால, வழிய மறிச்சு, கிட்கேட் சாக்லேட்ட குடுத்து, "இன்னைக்கு எனக்கு பர்த்டே" ன்னா சொல்லுவான்?

"இதெல்லாம் எனக்கு புடிக்காது" ன்னு சொல்லிட்டு கிளம்பிடுச்சு..

ராஜா வுக்கும் ரஜினிக்கும் அப்படியொரு சந்தோசம், விடுடா விடுடா.. ஒரு முடிவு தெரிஞ்சுசில்ல.. புடிக்கலன்னு.. சந்தோசப்படுடான்னு டாங்க..

ஆனாலும், ரமேஷுக்கு ஒரு டவுட், அந்த பொண்ணுக்கு கிட்கேட் புடிக்கலயா, இல்ல ரமேஷ புடிக்கலையா ன்னு தெரியல..


ஹ்ம்ம்ம்ம் அப்பறம், அப்டின்றவங்களுக்கு, ரமேஷோட கதை ட்ரெயிலரையே 12 வருஷம் கழிச்சு தான் எழுதியிருக்கேன்.. முழுக்க எழுதணூம்னா, இன்னும் ஒரு முப்பது வருஷம் ஆகும்..

2 comments: